உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.பி.ஐ., சுரங்கப்பாதையில் 3 மாத போக்குவரத்து மாற்றம்

ஆர்.பி.ஐ., சுரங்கப்பாதையில் 3 மாத போக்குவரத்து மாற்றம்

சென்னை, தெற்கு ரயில்வே துறை சார்பில், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில், 4வது ரயில் இருப்பு பாதை அமைக்கும் பணி இன்று இரவு துவங்கி மூன்று மாத காலத்திற்கு நடக்க உள்ளது.இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :  ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் அனுமதிக்கப்படாது.அதற்கு பதிலாக, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகு சாலை - வடக்கு கோட்டை சாலை - ஆர்.ஏ.மன்றம் - முத்துசாமி பாலம் - வாலாஜா பாயின்ட் கொடிமர சாலை - போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலை செல்லலாம்.  காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல செல்லலாம்.இதற்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு, சென்னை காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை