உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவிலுக்கு நன்கொடை மறுப்பு சகோதரர்களுக்கு கத்திக்குத்து

கோவிலுக்கு நன்கொடை மறுப்பு சகோதரர்களுக்கு கத்திக்குத்து

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஷெரிப் மகன்கள் அகமதுபாஷா, 35, பாரூக், 37. இவர்கள், திருக்கழுக்குன்றம், கொத்திமங்கலம் பகுதிகளில் காயலான் கடை நடத்துகின்றனர். பாரூக், பாஸ்ட் புட் கடையும் நடத்துகிறார்.கொத்திமங்கலம் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அப்பகுதியினர் அவர்களிடம் நன்கொடை கேட்டுள்ளனர். அதற்கு, அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, கருங்குழி சாலை சந்திப்பு பகுதியில், இரண்டு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கொத்திமங்கலம் கோவில் தரப்பினர், தங்களிடம் இருந்த கத்தியால், சகோதரர்களை வெட்டி தாக்கியுள்ளனர்.அவர்களுக்கு முதுகு, தோள் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அப்போது, அவர்களின் கடை ஊழியர் இம்ரான் என்கிற இப்ராஹிம், 33, தடுக்க முயன்றதால், அவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.திருக்கழுக்குன்றம் போலீசார் அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.தாக்குதலுக்கு காரணம், நன்கொடை விவகாரம் மட்டுமா அல்லது வேறு விவகாரம் உண்டா என, போலீசார் விசாரிக்கின்றனர்.சகோதரர்களின் தாயார் தவுலத் பீவி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, 10ம் வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். இவர், கடந்த 2022ல், திருக்கழுக்குன்றம் பா.ஜ., பிரமுகர் துரை.தனசேகர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடந்த ஆண்டு, திருக்கழுக்குன்றம் சர்புதீன் என்பவர் கொலை ஆகிய வழக்குகளில் கைதானது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு பதிந்து, தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ