| ADDED : ஜூலை 25, 2024 01:05 AM
சென்னை, அம்பத்துார் டி.என்.பி., காலனியில் உள்ள சிவா விஷ்ணு குளத்தை, 36 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சீரமைத்துள்ளது.மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:அம்பத்துார் மண்டலம், 82வது வார்டில், டி.என்.பி.காலனியில் உள்ள சிவா விஷ்ணு குளம் பழுதடைந்த நிலையில் இருந்தது. 224 சதுர மீட்டர் பரப்பளவில், 90.96 மீ., சுற்றளவில் 2.5 மீ., ஆழம் கொண்ட குளத்தை சுற்றிலும் புதர்ச்செடிகள், ஆக்கிரமிப்புகள் ஆகிவை இருந்தன.அந்த குளம், 36 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர், சாய்தள வசதியுடன் நுழைவாயில், இரண்டு கழிப்பறைகள், நடைபாதை குளத்தை சுற்றிலும் கைப்பிடி தடுப்புகள், காவலர் அறை, விளக்குகள் மற்றும் மின்வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மரக்கன்றுகள், குளத்திற்கான வரத்து மற்றும் போக்கு கால்வாய் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.பசுமைப்பரப்பை அதிகரிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சீரமைக்கப்பட்டு உள்ள குளம், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.