உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பருவமழைக்கு முன் ஏரியை துார் வாரி ஆழப்படுத்த கோரிக்கை

பருவமழைக்கு முன் ஏரியை துார் வாரி ஆழப்படுத்த கோரிக்கை

பூந்தமல்லி:பூந்தமல்லி ஒன்றியம் பாரிவாக்கம் ஊராட்சியில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன், 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்துள்ளது. தற்போது 15 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.இந்த நிலையில், தற்போது பராமரிப்பின்றி பாரிவாக்கம் ஏரி விணாகி வருகிறது. இந்த நிலையில், பருவமழைக்கு முன், ஏரியை துார் வாரி ஆழப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து பாரிவாக்கம் மக்கள் கூறியதாவது:பாரிவாக்கம் ஏரிக்கரை, பல இடங்களில் சேதமாகி உள்ளது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, ஏரி துார்ந்து போய் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் இந்த ஏரி விரைவில் நிரம்பி குடியிருப்பு மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், பருவமழைக் காலங்களின் போது, பீதியுடனே வாழ்கிறோம்.எனவே, ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, ஏரியை துார்வாரி ஆழப்படுத்தினால், அதிக நீரை தேக்கி வைக்கலாம். இதனால், வெள்ள பாதிப்பு குறையும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை