உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் சக தொழிலாளியை வெட்டிய இருவருக்கு காப்பு

போதையில் சக தொழிலாளியை வெட்டிய இருவருக்கு காப்பு

கோயம்பேடு, மது போதையில், சக தொழிலாளியை கத்தியால் வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்தவர்களான ரஞ்சித், 19; ஆகாஷ், 29, சாலிகிராமம் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல், 27, சாலிகிராமம் மதியழகன் நகரைச் சேர்ந்த சற்குணம், 28, ஆகியோர், சுமை துாக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று, வேளச்சேரியில் சுமை இறக்கி விட்டு, கோயம்பேடு 'ஏ' சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது அருந்தினர். பின், வெளியே வந்த போது, இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த வெற்றிவேல், சற்குணம் உட்பட மூவர் சேர்ந்து ரஞ்சித், ஆகாஷ் ஆகிய இருவரையும் இரும்பு ராடால் தலையில் அடித்து, லோடு வேனில் ஏற்றியுள்ளனர்.அப்போது, லோடு வேனில் இருந்த நபர், கத்தியால் ரஞ்சித்தை வெட்டினார். இதில், ரஞ்சித்தின் இடது கையில் காயம் ஏற்பட்டது.அப்போது, அங்கு ரோந்து வந்த கோயம்பேடு போலீசாரைக் கண்டதும், ரஞ்சித், ஆகாஷை வேனில் இருந்து இறக்கி விட்டு தப்பிச் சென்றனர். இருவரையும் மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேனை பின்தொடர்ந்து சென்ற போலீசார், சின்மயா நகர் அருகே மடக்கி வெற்றிவேல், சற்குணத்தை கைது செய்தனர். தப்பிச் சென்ற ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை