உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்னல்களில் பொலிவிழந்த நீரூற்றுகள் சீரமைக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

சிக்னல்களில் பொலிவிழந்த நீரூற்றுகள் சீரமைக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்

அண்ணா நகர், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பிரதான சாலை சந்திப்புகளில் பொலிவிழந்து காணப்படும் செயற்கை நீரூற்றுகளை, சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னையை அழகுபடுத்தும் விதமாக, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, பொது இடங்களில் சுவர்களில் கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைவதுடன், சுவர் பூங்காக்களும் அமைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி, முக்கிய சாலைகளை புனரமைத்து, மக்களை கவரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஆனால், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகளை கண்டுகொள்ளாமல் விடுவதால், அவை சீரழிந்து வருகின்றன.அண்ணா நகர் மண்டலம், மூன்றாவது அவென்யூ, அண்ணா ரவுண்டானா, கே - 4 காவல் நிலையம் எதிரிலும், நியூ ஆவடி சாலை இணைப்பு சாலை சிக்னலிலும், செயற்கை நீரூற்றுகள் உள்ளன.இவை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பழுதடைந்து உள்ளன. எனவே, இவற்றை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மக்களின் வரிப்பணத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் பல திட்டங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால் அதை முறையாக செயல்படுத்தாததால் அரைகுறையாகவும், பராமரிப்பின்றியும் உள்ளன.அண்ணா நகர் காவல் நிலையம் அருகில், புதிதாக அமைக்கப்பட்ட நீரூற்று பயன்பாட்டிற்கு வராமல் பயனற்று கிடக்கிறது. மாநகராட்சியின் அலட்சியத்தால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. சம்பந்தப்பட்ட இடங்களில் சீரழிந்துள்ள நீரூற்றுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ