உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.70,000 கோடி ஈட்டியும் போதிய வசதியற்ற சிப்காட்

ரூ.70,000 கோடி ஈட்டியும் போதிய வசதியற்ற சிப்காட்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.இவற்றில் எலக்ட்ரானிக், ஹார்டுவேர், தொலைதொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், டயர், ரசாயனம், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 70,000 கோடி ரூபாய்க்கு, உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்த தொழிற்சாலைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு, தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டஅடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை