உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலின் வெண்மை போன்றது சனாதனம் கவர்னர் ரவி பேச்சு

பாலின் வெண்மை போன்றது சனாதனம் கவர்னர் ரவி பேச்சு

சென்னை:''பாலில் இருந்து வெண்மை நிறத்தை எப்படி பிரிக்க முடியாதோ; அதுபோல பாரதத்தில் இருந்து சனாதனத்தை பிரிக்க முடியாது,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.கவுடியா மிஷன் ஸ்தாபக ஆச்சாரியார் மற்றும் உலக ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் முன்னோடி ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதரின் 150வது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா பல்கலை அரங்கில், நேற்று மாலை நடந்தது.கவர்னர் ரவி விழா மலரை வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதரின் 150-வது பிறந்த நாள் விழாவை, பிப்., 8ம் தேதி, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவில், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரத தேசம் ரிஷிகளால் உருவானது. நாட்டு மக்களை ஆன்மிகம் ஒருங்கிணைக்கிறது.நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் ஆன்மிகம் இருந்தால், அந்த நாடு வலுவான நாடாக இருக்கும். நம் நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உடல் வலுவால் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மக்கள் வலுவாக இருந்ததால் தான் சுதந்திரம் கிடைத்தது. பாலில் இருந்து வெண்மை நிறத்தை எப்படி பிரிக்க முடியாதோ... அதுபோல பாரதத்தில் இருந்து சனாதனத்தை பிரிக்க முடியாது.இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை