உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி கூடைப்பந்து போட்டி லேடி சிவசாமி அணி சாம்பியன்

பள்ளி கூடைப்பந்து போட்டி லேடி சிவசாமி அணி சாம்பியன்

சென்னை, சென்னை, பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., தொடக்கப் பள்ளியில் மேத்யூ சத்யபாபு நினைவுக் கோப்பைக்கான, பள்ளிகள் இடையிலான கூடைப்பந்து போட்டிகள் நடந்தன. இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பெண்களுக்கான 'யு 13' பிரிவில், அரையிறுதியில், ஐ.சி.எப்., பள்ளி அணியை 28 -- ------7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய லேடி சிவசாமி பள்ளி, இறுதி போட்டியில் எழும்பூர் அணியை 28 -- 11 என வீழ்த்தியது.அதேபோல், பெண்களுக்கான 'யு - 15' பிரிவின் அரையிறுதியில், ஐ.சி.எப். தெற்கு காலனி பள்ளியை 30 -- 7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய லேடி சிவசாமி பள்ளி அணி, இறுதி போட்டியில் ஐ.சி.எப்., ஹீட்ஸ் அணியை 45 -- 18 என வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இரு பிரிவிலும், சாம்பியன் பட்டம் வென்ற லேடி சிவசாமி பள்ளி அணி வீராங்கனையரை, அப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை