உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடத்தல் தங்கம் இ - சிகரெட் பறிமுதல்

கடத்தல் தங்கம் இ - சிகரெட் பறிமுதல்

சென்னை,துபாயிலிருந்து சென்னை வந்த விமான பயணியர் இருவரின் உடைமைகளை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அதிலிருந்த வெள்ளி முலாம் பூசிய, 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 780 கிராம் தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து வந்த தமிழக பயணி ஒருவரை சோதனை செய்து, அவர் ஆபரணங்களாக கடத்தி வந்த 497 கிராம் உள்ள, 30 லட்சம் ரூபாய் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சார்ஜாவில் இருந்து வந்திறங்கிய மதுரை பயணி ஒருவரை சோதனை செய்த போது, அவரது பைக்குள் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 366 கிராம் தங்கம் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும், துபாயிலிருந்து வந்த சென்னை பயணி ஒருவரை சந்தேகித்து விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்ததில் 1,200 இ - சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 30 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை