உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இர்பான் பைக் ஓட்டியதற்கு விற்பனையாளருக்கு அபராதம்

இர்பான் பைக் ஓட்டியதற்கு விற்பனையாளருக்கு அபராதம்

சென்னை, 'யு - டியூபர்' இர்பான் என்பவர் அடையாறு பெசன்ட் அவென்யூவில் செயல்படும் ஒரு ஷோரூமில், இறக்குமதி செய்யப்பட்ட 'சுசூகி ஹயாபுசா' இருசக்கர வாகனத்தை சமீபத்தில் ஓட்டினார்.பதிவு எண் பொருத்தப்படாத வாகனத்தை, இர்பான் ஓட்டியுள்ளார். மேலும் அவர், தலைகவசமும் அணியவில்லை.இது குறித்த வீடியோவுடன், போலீசாரின் 'எக்ஸ்' தளத்தில் ஒருவர் புகார் பதிவு செய்தார்.இதையடுத்து, இர்பான் தலைகவசம் அணியாதது, சாலை விதிமுறைபடி வாகன பதிவு எண் தகடு பொருத்தாததற்கு, வாகனத்தின் சொந்தகாரரான ஷோரூம் உரிமையாளருக்கு, அடையாறு போக்குவரத்து போலீசார், 1,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி