உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தரிக்காய் வரத்து குறைவு விலை திடீர் அதிகரிப்பு

கத்தரிக்காய் வரத்து குறைவு விலை திடீர் அதிகரிப்பு

சென்னை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு, காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன.மழையால், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால், அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பலவகை காய்கறிகள் விலை உச்சத்தில் உள்ளன. இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.கிலோ நீல நிற கத்தரிக்காய் 90 ரூபாய்க்கும், பச்சை நிற கத்தரிக்காய் 70 ரூபாய்க்கும், முள் கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன், கிலோ கத்தரிக்காய் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் விலை திடீரென உயர்ந்து வருவது, நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்