உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு நகரம் டெண்டர் அறிவிப்பு

விளையாட்டு நகரம் டெண்டர் அறிவிப்பு

சென்னை செம்மஞ்சேரியில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்திற்காக, தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., 'டெண்டர்' கோரியுள்ளது.சென்னையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என, தமிழக அரசு 2022 பட்ஜெட்டில் அறிவித்தது. அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், இதற்கான பணிகள் எதுவும் அப்போது துவங்கப்படவில்லை. இந்நிலையில், 2023ல் இத்திட்டத்துக்கான நிலம், பழைய மாமல்லபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது.இதையடுத்து, இத்திட்டத்துக்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசகர்கள் தேர்வுக்கான டெண்டர், 2023 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்வு செய்தவர்கள் வாயிலாக அப்பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், சர்வதேச விளையாட்டு நகரம் திட்டத்திற்காக தொழில்நுட்ப, பொருளாதார அறிக்கை மற்றும் பரிவர்த்தனை, ஆலோசனை சேவைகளுக்காக, கலந்தாலோசகர் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் அறிவிப்பை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். இதன்படி வல்லுனர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை