உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச ஓபன் செஸ் 533 சிறார்கள் பங்கேற்பு

சர்வதேச ஓபன் செஸ் 533 சிறார்கள் பங்கேற்பு

சென்னை காரப்பாக்கத்தில் துவங்கியுள்ள சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், 533 பேர் ஆர்முடன் பங்கேற்றுள்ளனர்.டாக்டர்.கே.ஜி.எஸ்.வர்கிஷ் நினைவு கோப்பைக்கான சர்வதேச ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டி, காரப்பாக்கத்தில் உள்ள கே.ஜி.எஸ்., கல்லுாரி வளாகத்தில் துவங்கியுள்ளது.போட்டியில், நாடு முழுதும் இருந்து, 533 பேர் ஆர்வமுடன் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டிகள் ஒன்பது சுற்றுகள் வீதம், நாளை வரை நடக்கின்றன.நேற்று நடந்த சுற்றுகள் முடிவில், தமிழக வீரர்கள் பாலசுப்பிரமணியன், ஷாம், வீரமணி, தர்ஷின், அஸ்வின் ஆகியோர் தலா ஐந்து புள்ளிகள் எடுத்து, முன்னிலையில் உள்ளனர்.அவர்களைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீராம், அனிருத்ராஜன், அசோக்குமார், சதீஷ், சிவன் ரோஷன், சரவணன், பிரசன்னா கார்த்திக், ராம்குமார், சத்தியநாராயணா உள்ளிட்ட 10 பேர், 4.5 புள்ளிகளுடன், இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளனர். போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக, 3 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை