உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில பூப்பந்தாட்டம் சென்னை பள்ளி சாம்பியன்

மாநில பூப்பந்தாட்டம் சென்னை பள்ளி சாம்பியன்

சென்னை, அம்பத்துார், சேதுபாஸ்கரா பள்ளி சார்பில், சேது அய்யா நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான பால் பேட்மின்டன் போட்டி, பள்ளி வளாகத்தில் கடந்த இரு நாட்கள் நடந்தன.மாணவியருக்கான இப்போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. போட்டியை, சேது பாஸ்கரா பள்ளி தாளாளர் சேது குமணன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத்தின் பொதுச்செயலர் எழிலரசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.அனைத்து போட்டிகள் முடிவில், சென்னையைச் சேர்ந்த சி.எஸ்.ஐ., ஜெஸ்சி மோசஸ் பள்ளி முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து, மதுரை ஒ.சி.பி.எம்., பள்ளி இரண்டாம் இடத்தையும், விழுப்புரம் ஒய்காப் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி நான்காம் இடத்தையும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை