உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில குத்துச்சண்டை போட்டி திருவள்ளூர், சென்னை அபாரம்

மாநில குத்துச்சண்டை போட்டி திருவள்ளூர், சென்னை அபாரம்

சென்னை, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் இணைந்து, கீழ்ப்பாக்கத்தில் மாநில ஓபன் குத்துச்சண்டை போட்டி, கடந்த நான்கு நாட்கள் நடத்தின.இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களில் இருந்து, பல பிரிவுகளில், 500 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.சப் - ஜூனியர் பிரிவில் விழுப்புரம் மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இரண்டாம் இடத்தை, விருதுநகர் மாவட்டம் தட்டிச் சென்றது.ஜூனியரில், திருவள்ளூர் சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை சென்னை கைப்பற்றியது.யூத் பிரிவில் விருதுநகர் முதலிடத்தையும், சென்னை இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின. சீனியர் பிரிவில், திருவள்ளூர் மாவட்டம் முதலிடத்தையும், தேனி இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த சிறுவர் - சிறுமியருக்கு பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை