உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர்

ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.வாகன புறப்பாடுகள்:பிரம்மோற்சவத்தில் இன்று இரவு நாக வாகன புறப்பாடும், நாளை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 18ம் தேதி இரவு யானை வாகன புறப்பாடு நடக்கிறது.பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 19ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது.வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், கலசாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகன புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ