உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழாயில் திடீர் உடைப்பு ஆறாக ஓடிய தண்ணீர்

குழாயில் திடீர் உடைப்பு ஆறாக ஓடிய தண்ணீர்

மீனம்பாக்கம்:ஆலந்துார் மண்டலம், மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையில் அதிக அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிநீர் வாரியத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பீறிட்டு ஓடியது.தகவலறிந்த மீனம்பாக்கம், வார்டு கவுன்சிலர் அமுதபிரியா, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, குடிநீர் இணைப்பை துண்டிக்க செய்தார்.இதையடுத்து, குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் தலைமையில் வந்த ஊழியர்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று மாலை வரை, இந்த பணி தொடர்ந்ததால், ஜி.எஸ்.டி., சாலையின் குறிப்பிட்ட இடத்தில், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. நேற்று, வார விடுமுறை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை