உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை வசதியின்றி அவதி

சாலை வசதியின்றி அவதி

மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், நேரு நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தனியார் பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. இந்நிலையில் இங்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, உரிய சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி இல்லை.தவிர, தெருவில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும், மின் வடங்கள் தாறுமாறாக தொங்குகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து சாலை, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.கஸ்துாரி, 31, நன்மங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ