உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு சாலையில் ஆட்டோக்களால் அவதி

கோயம்பேடு சாலையில் ஆட்டோக்களால் அவதி

கோயம்பேடு, தே.மு.தி.க., அலுவலகம் அருகே, 100 அடி சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோக்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சென்னை, கோயம்பேடு 100 அடி சாலையில், தே.மு.தி.க., அலுவலகம் உள்ளது. இங்கு, மறைந்த தே.மு.தி.க., தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்தின் சமாதி அமைந்துள்ளது.விஜயகாந்த் சமாதியை பார்க்க, பொதுமக்கள் அதிகமானோர் வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகரிக்கவே, தற்போது தே.மு.தி.க., அலுவலகம் அருகே, 100 அடி சாலையோரம் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. இது 100 அடி சாலையில் உள்ள புது மேம்பாலம் நுழைவாயில் அருகே உள்ளது.இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்