உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகமூட்ட மாரத்தான்

தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகமூட்ட மாரத்தான்

சென்னை, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் - 2024 போட்டி நடக்கிறது. இதில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ், ராஜேஸ் ரமேஷ், வித்யா ராமராஜ், சுபா வெங்கடேஷ், நேத்ரா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.தவிர, பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மாரியப்பன், துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ சுமதி உள்ளிட்டோரும் பாரிஸ் சென்றுள்ளனர்.இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் தாம்பரம்' சார்பில் மேற்கு தாம்பரத்தில், மினி மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது.தாம்பரம் டி.டி.கே., நகரில் உள்ள ஸ்காட் மைதானத்தில் இருந்து முடிச்சூர் வரை 5 கி.மீ., துாரம் போட்டி நடத்தப்பட்டது.இதில், 18 - 35 வயதுக்குட்ட ஆண்கள், பெண்கள் தவிர, 10, 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் என, பல பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடந்தன.தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா தலைமையில் நடந்த இப்போட்டியில், 3,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, போட்டியை துவங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி