உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச சிலம்பம் போட்டி பெருமை சேர்த்த தமிழர்கள்

சர்வதேச சிலம்பம் போட்டி பெருமை சேர்த்த தமிழர்கள்

நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில், கோப்பை வென்ற தமிழக வீரர்கள்.சென்னை, நேபாளத்தின், பொக்காரா நகரில், கடந்த மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை, இந்தோ - நேபாள சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், சிங்கப்பூர், மலேஷியா, நேபாளம், பூடான், துபாய், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.இந்த போட்டியில், இந்தியாவின் சார்பில் பஞ்சாப், ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 104 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அதில், இந்தியா 83 தங்கம், 35 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை அள்ளி, முதலிடத்தை பிடித்தது. நேபாளம் இரண்டாம் இடத்தை பிடித்தது.இந்திய அணியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனையர் 62 தங்கம், 20 வெள்ளி, எட்டு வெண்கல பதக்கங்களை வென்றனர். சென்னையைச் சேர்ந்த ஐ.எஸ்.கே., சிலம்பம் கிளப் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் 49 தங்கம், 14 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை