| ADDED : ஜூலை 29, 2024 01:33 AM
சென்னை:சென்னை பெருநகரில் எம்.எல்.ஏ., தொகுதி வாரியாக அடிப்படை வசதி மேம்பாட்டுக்கான திட்டங்கள், வட சென்னை வளர்ச்சி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. சி.எம்.டி.ஏ., வெளியிட்ட செய்திக்குறிப்பு: சி.எம்.டி.ஏ., சார்பில் சென்னை பெருநகளில் பள்ளி கட்டடங்கள் கட்டுதல், மருத்துவ மையங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், 100 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் தொடர்புடைய 135 பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும், 2025 டிச., இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதிய வசதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். வட சென்னை வளர்ச்சிக்காக, 4,378 கோடி ரூபாயில், 218 பணிகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 118 பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகளையும், 2025 டிச., இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.