உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரத்தில் தொழில் நுட்ப நகரம்

மாதவரத்தில் தொழில் நுட்ப நகரம்

சென்னை, சென்னை மாதவரத்தில், 150 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் பணியில், 'டிட்கோ' எனும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இது தொடர்பாக, தொழில் துறை அமைச்சர் ராஜா, 'டிட்கோ' அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். தகவல் தொழில்நுட்ப நகரில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் தொழில் துவங்கலாம்.அதற்கேற்ப, தகவல் தொழில்நுட்ப பூங்கா, உலகளாவிய திறன் மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஆய்வகம், தங்கும் வசதி, வணிக வளாகம், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்டவை, சர்வதேச தரத்தில் இடம்பெற உள்ளன. இத்திட்டத்திற்கு அறிக்கை தயாரித்து வழங்க, 'டெண்டர்' விடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை