உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

கழிவுநீர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

விருகம்பாக்கம், வியாசர்பாடி, பாலகிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 26. இவர், 'பிளிப்கார்ட்' பொருட்கள் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக, தன் 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' ஸ்கூட்டியில் சென்றார். விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, ஸ்கூட்டி மீது மோதியது.இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திக், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார், அவரது உடலை மீட்டு கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கழிவுநீர் லாரி ஓட்டுனரான கும்பகோணத்தைச் சேர்ந்த ரஞ்ஜித், 31, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை