உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விவேகானந்தா குழும பள்ளிகளுக்கான 39ம் ஆண்டு போட்டிகள் துவக்கம்

விவேகானந்தா குழும பள்ளிகளுக்கான 39ம் ஆண்டு போட்டிகள் துவக்கம்

சென்னை, விவேகானந்தா கல்விக் கழகத்தின், 39ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள், பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், நேற்று காலை துவங்கின.இதில், சென்னை உட்பட மாநிலம் முழுதும் பல்வேறு பகுதிகளில் இயங்கும், 200க்கும் மேற்பட்ட விவேகானந்தா பள்ளிகளைச் சேர்ந்த, 2,000 மாணவ - மாணவியர் பங்கேற்று திறமை வெளிப்படுத்தினர்.முன்னதாக, அந்தந்த பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தேர்வானவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.அந்த வகையில் நேற்று துவங்கிய போட்டிகளை, விவேகானந்தா கல்விக் கழக செயலர் வெங்கடேசன் தலைமையில், பன்னாட்டு சுழற்சங்கத்தின் மாவட்ட கவர்னர் வினோத் சரோகி, இந்திய கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் அனிதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல், நீளம் மற்றும உயரம் தாண்டுதல், கோ - கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை