உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூங்காவை ஆக்கிரமித்த கடைகள் அதிரடியாக அகற்றியது மாநகராட்சி

பூங்காவை ஆக்கிரமித்த கடைகள் அதிரடியாக அகற்றியது மாநகராட்சி

ஷெனாய் நகர், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, ஷெனாய் நகர் பூங்காவைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.ஷெனாய் நகரில் ஒன்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட, சென்னை மாநகராட்சியின் பழமையான திரு.வி.க., பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மெட்ரோ ரயில் பணிக்காக சில பகுதிகள் எடுக்கப்பட்டதால், கடந்த 2011ல் பூங்கா மூடப்பட்டது.பணிகள் முடிந்த பின், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன், 18 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், கடந்த 2018ல் பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கின.இசையுடன் கூடிய நீரூற்று, விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட சர்வதேச தரத்தில் மறுசீரமைக்கப்பட்ட பூங்காவை, கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதிநவீன வசதிகளுடன் பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளதால், பார்வையாளர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், பூங்காவைச் சுற்றி அனுமதியில்லாமல், ஏராளமான கடைகள் முளைத்தன.இதனால், மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பூங்காவிற்கு வருவோரும், முறையாக வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று, அண்ணா நகர் மண்டல மாநகராட்சி சார்பில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல், சாலையோரங்களில் பல ஆண்டுகளாக நிற்கும் தனியார் வாகனங்களையும், பாரபட்சமின்றி அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S MURALIDARAN
ஜூலை 05, 2024 23:06

பொதுமக்களின் பொது பிரச்சனைகளை அவ்வப்போது வெளியிட்டு அதற்கு தீர்வூ காணும் தினமலரின் சமூக பொறுப்புணர்வை பாராட்டுகிறேன்.


மேலும் செய்திகள்