| ADDED : ஜூன் 03, 2024 02:18 AM
செங்குன்றம்:செங்குன்றம், அழிஞ்சிவாக்கம், நியூ சன் சிட்டி நகரில், தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், இரண்டு நாய்கள் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தன. நேற்று காலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதிக்கு அறிமுகமில்லாத நபர்கள் கூட்டமாக வருகின்றனர். இந்த பகுதியில் கஞ்சா விற்பனை ஜோராக தெரிகிறது. கஞ்சா வாங்கும் கும்பல், இங்குள்ள மரத்தடிகளில் அமர்ந்து, போதையை ஏற்றிக்கொண்டு, அலப்பறை செய்கின்றனர்.இங்குள்ள நாய்கள், எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் குரைத்து கொண்டே இருக்கும். இதனால், வெளி நபர்கள் வருவதற்கு அச்சப்பட்டனர். கஞ்சா வாங்கவும், புகைக்கவும் இடையூறாக இருந்த நாய்களின் தலை, முகம் ஆகியவற்றை கொடூரமாக வெட்டிக்கொன்று வீசியுள்ளனர். இதற்கு காரணமான போதை கும்பல் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.