உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பன்றி, மாடுகளின் இதய வால்வு மனிதனை காக்க உதவுகிறது

பன்றி, மாடுகளின் இதய வால்வு மனிதனை காக்க உதவுகிறது

சென்னை, சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் சிகிச்சை முறை குறித்த கருத்தரங்கம் நடந்தது.இதில் கால்நடை, செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள், பறவைகள் குறித்த, 360 கட்டுரைகள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டன.சிறப்பு விருந்தினாக பங்கேற்ற, இதய சிகிச்சை நிபுணர், 'ப்ரண்டையர் லைப் லைன்' மருத்துவமனை நிறுவனர் செரியன் பேசியதாவது:மனித இதய அறுவை சிகிச்சைகளின் நவீன வளர்ச்சிக்கு, கால்நடைகள் மற்றும் கால்நடை டாக்டர்களின் பங்கு இன்றியமையாதது.பன்றி மற்றும் மாடுகளின் இதய வால்வுகள், இதய வெளிப்புற சவ்வு மற்றும் நுரையீரல் தமனி போன்றவை, மனிதர்களின் உயிர்களை காக்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.ஆடுகளின் எலும்பு மஜ்ஜையிலிருந்து பெறப்படும், 'ஸ்டெம் செல்கள்' கொண்டு குழந்தைகளின் இதய நோய்கள் குணமாக்கப்படுகிறது. எனவே, மனித உயிர்களை காப்பதில், கால்நடைகளின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை