உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியுடன் பழகியதை கண்டித்த கணவர் அடித்து கொலை

மனைவியுடன் பழகியதை கண்டித்த கணவர் அடித்து கொலை

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் ரவி, 40; மேஸ்திரி. இவரது மனைவி மணிமேகலை, 35. துாய்மை பணியாளர்.ரவியும், பனையூர் அடுத்த ஒரகடத்தில் பானிபூரி கடை நடத்தி வரும், திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரும் நண்பர்கள்.இதனால், மணிகண்டன், ரவி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில், ரவியின் மனைவிக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து உள்ளனர்.இதையறிந்த ரவி, மணிகண்டனை கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஒரகடம் வந்த ரவி, மணிகண்டனின் கடைக்கு சென்று, மனைவியுடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என, அவரை கண்டித்து உள்ளார்.இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மணிகண்டனுக்கு ஆதரவாக, அவரது தம்பி கோபியும் வந்து ரவியை தாக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் மணிகண்டன் மற்றும் கோபியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி