உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்

வியாசர்பாடி, மாதவரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனா, 80; கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்தார்.நேற்று வெகுநேரமாகியும் மூதாட்டி மீனா வெளியே வராததால், எதிர் வீட்டில் வசிப்போர் சென்று பார்த்தனர். அப்போது, மூதாட்டி சுயநினைவின்றி இருந்ததால், மாதவரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் இவரது மகள் பத்மாவதிக்கு தகவல் கூறினர்.அவர் வந்து பார்த்த போது, தலையில் ரத்த காயத்துடன் மூதாட்டி இறந்து கிடப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்