உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு கார் கண்ணாடி உடைத்தவர் கைது

அரசு கார் கண்ணாடி உடைத்தவர் கைது

கோயம்பேடு, காந்தி நகர், மொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 25; கைத்தறி துணி நுால் துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவி இயக்குனரின் கார் ஓட்டுனர்.நேற்று காலை 7:15 மணிக்கு, தனி ஆளாக கலங்கரை விளக்கத்திலிருந்து பட்டினப்பாக்கம் நோக்கி, அரசு வாகனமான 'பொலீரோ' காரை ஓட்டிச் சென்றார்.நொச்சிகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே, மது போதையில் வந்த நபர், கல்லால் அடித்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். காரை நிறுத்திய ஹரிபிரசாத், மது போதை ஆசாமியை பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.சம்பவம் குறித்து ஹரிபிரசாத், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கார் கண்ணாடியை உடைத்த மயிலாப்பூரைச் சேர்ந்த, விக்னேஷ், 34, என்பவரை கைது செய்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ