| ADDED : ஏப் 23, 2024 12:57 AM
புதுவண்ணாரப்பேட்டை, ஏதிருவொற்றியூரில் யுத்த வர்ம சிலம்ப போர் கலை அகாடமி விளையாட்டு சங்கம் சார்பில், புதுவண்ணாரப்பேட்டை, துறைமுக பொறுப்பு கழக விளையாட்டு திடலில் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது.இதில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த 4 வயது முதல் 53 வயது வரை உள்ள 750 பேர் பங்கேற்று, தமிழகம் வரைபடத்தை போல நின்று, இரண்டு மணி நேரம் சிலம்பம் சுழற்றி 'கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை புத்தகத்தில் இடம் இடம் பெற்றனர். காமராஜ் துறைமுக தலைமைச் செயலர் சிந்தியா போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கும், சிலம்பப் பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழையும், பரிசுகளையும் வழங்கினார்.விளையாட்டு சங்கத்தினர் கூறியதாவது:தமிழகத்தின் முக்கியமான பாரம்பரிய விளையாட்டுகளில் சிலம்பம் ஒன்று. தற்போது அதன் அவசியத்தை அனைவரும் அறிந்து வருவதால், சிலம்பம் விளையாட்டு அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சிலம்பம் தற்காப்பு கலை என்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடையே உறுதிப்படுத்துகிறது.சிலம்பம் கலையை உலகளவில் பரப்புவதற்காகவும், ஊக்குவிக்கவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அந்த வகையில், 'யூனிவர்சல் அச்சீவர்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் பியூச்சர், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெற சாதனை நிகழ்ச்சி நடந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.