புளியந்தோப்பு, புளியந்தோப்பு, சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் நாயகன், 30. புளியந்தோப்பு, வாசுகி நகரில் பகுதியில் வந்த போது, ரவுடிகள் இருவர், இவரிடம் கத்திமுனையில் மிரட்டி 200 ரூபாயை பறித்துச் சென்றனர்.போலீசாரின் விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவரின் மகன் 'கங்கா' கணேஷ், 19, மற்றும் அவரது நண்பர் 'துப்பாக்கி' சந்தோஷ், 21, என்பது தெரியவந்தது.கடந்த சில வாரங்களுக்கு முன் புளியந்தோப்பு பகுதியில் ரவுடியிசம் செய்து வந்த கங்கா கணேஷிடம் போலீசார் எச்சரித்து அனுப்பியிருந்தனர். தற்போது, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கையில், வியாசர்பாடியை சேர்ந்த 'டைகர்' அரவிந்த், 32, ஓட்டேரியைச் சேர்ந்த ஹென்றி, 22, புளியந்தோப்பைச் சேர்ந்த 'கோண' சிவா, 22, சீனிவாசன், 24, ஆகியோர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல, வியாசர்பாடியில் கத்தியுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் மர்ம நபர் சுற்றித்திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில், வியாசர்பாடி, உதயசூரியன் நகரைச் சேர்ந்த ராஜசேகர், 27, என தெரிந்தது. இவர் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.