உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் பாலாறு குடிநீர் சப்ளை தாம்பரம் வாசிகள் கோரிக்கை

மீண்டும் பாலாறு குடிநீர் சப்ளை தாம்பரம் வாசிகள் கோரிக்கை

பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிகள் பேரூராட்சியாக இருந்த போது, முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து, ராஜிவ்காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில் பாலாறு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.அப்போது, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதி மக்கள், இந்த இடங்களில் பாலாறு தண்ணீரை பிடித்து சென்று, குடிநீராக பயன்படுத்தி வந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாலாற்று குடிநீரால் பயன்பெற்று வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் திடீரென வினியோகம் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, 80 சதவீத மக்கள், பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலைக்கு மாறிவிட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தி.மு.க., வெற்றி பெற்றால், பாலாறு குடிநீர் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற பின், அது குறித்து மறந்து விட்டனர்.பகுதிவாசிகளின் நலனை கருத்தில் வைத்து, பாலாற்று குடிநீர் திட்டத்தை மீண்டும் கொண்டு வர கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை