உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மதுரவாயல்:மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த, ஹோட்டல் தொழிலாளி பலியானார்.திருநெல்வேலி, களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 31. இவர், நண்பர்களுடன் சேர்ந்து மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகர், காந்தி தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த தினேஷ்குமார், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மூன்றாவது மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது, மாடி தடுப்புச் சுவர் மீது அமர்ந்து மொபைல்போனில் பேசியுள்ளார். திடீரென, அங்கிருந்து தவறி விழுந்த தினேஷ்குமார் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.மதுரவாயல் போலீசார், தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ