உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் வாரிய கிடங்கில் காப்பர் கம்பிகள் திருட்டு

மின் வாரிய கிடங்கில் காப்பர் கம்பிகள் திருட்டு

பழவந்தாங்கல்:சென்னை, மூவரசம்பட்டு ஊராட்சியின் ஒரு பழைய கட்டடத்தில், மின் வாரிய தளவாடப் பொருள்களை வைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது.இந்த கிடங்கில் அறுந்த மின் கம்பிகள், பழைய மின்மாற்றிகள், பெட்டிகள்,காப்பர் கம்பிகள், ஆயில் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை, கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மின்வாரிய உதவிப் பொறியாளர் வெங்கடேசன் வந்து ஆய்வு செய்ததில், 70 கிலோ காப்பர் கம்பிகள் திருடுபோனது தெரிந்தது.இது குறித்த புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி