உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கலாட்டா மாணவர்கள் மூவர் கைது

கலாட்டா மாணவர்கள் மூவர் கைது

திருவல்லிக்கேணி,விவேகானந்தர் இல்லத்தில் இருந்து திரு.வி.க., நகர் நோக்கி, தடம் எண்: 38சி மாநகர பேருந்து, கடந்த 7ம் தேதி சென்றது. அதில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பயணியரை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். சென்ட்ரல் அருகே பேருந்து சென்ற போது கூரையின்மீது ஏறியும், நடத்துனர், ஓட்டுனரையும் மிரட்டினர். விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ராயப்பேட்டையில் உள்ள பிரபல கல்லுாரி மாணவர்களான அசாரூதின், 19, சாகுல் அமீது, 18, அப்துல் காதர், 19, உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி