உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (23/08/24)

இன்று இனிதாக பகுதிக்கு (23/08/24)

ஆன்மிகம் உபன்யாசம்தாம்பரம் ஆஸ்திக சபா சார்பாக, ஸ்ரீ கிருஷ்ணனின் பிருந்தாவனம் மற்றும் கோகுலம் லீலைகள், நிகழ்த்துபவர்: ஸ்ரீநிவாஸ வரதன் - மாலை 6:45 முதல் இரவு 8:30 மணி வரை. அனுமதி இலவசம். இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம். சொற்பொழிவு:தலைப்பு: கண்ணா ஒரு நாள் காண வாராயோ. நிகழ்த்துபவர்: கிருஷ்ணன் சுவாமிகள். மாலை 6.00 மணி. இடம்: கெஜலட்சுமி கல்யாண மண்டபம், 31, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி. வெள்ளி வழிபாடு:சிறப்பு அபிஷேகம்: காலை 8:00 மணி - சிறப்பு அலங்காரம்: மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை. சுக்ர வார வழிபாடு:சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், இ.சி.ஆர்., சாலை, நீலாங்கரை. கும்பாபிஷேகம்காலை 6:00 மணிக்கு பரிவார கலசங்கள் புறப்பாடு, காலை 7:15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும் மஹா குடமுழுக்கு, மாலை 6:00 மணிக்கு கல்யாண உற்சவம், திருவீதி உலா. இடம்: கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில், கோமளீஸ்வரன்பேட்டை, சென்னை - 2.பொது 'ஸ்கார்ப்' அமைப்பின் 40ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம். மாலை 6:30 மணி. இடம்: தி சவேரா ஹோட்டல், 146, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர். பதக்கங்கள் வழங்கும் விழாஜனாதிபதி, உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா. மாலை 5:00 மணி. இடம்: ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர். வேலை வாய்ப்பு முகாம்:கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை. காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகம், ஆலந்துார் சாலை, கிண்டி. கிருஷ்ண தரிசனம் கண்காட்சிகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில்,'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி-, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை