உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடசென்னை ரயில் நிலையங்களில் போதை வஸ்துகள் கடத்தல் அமோகம்

வடசென்னை ரயில் நிலையங்களில் போதை வஸ்துகள் கடத்தல் அமோகம்

சென்னை:சென்னையில், குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, பெட்டி கடை, மளிகை கடைகளில் சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்டு, போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடந்தது. போலீசார் சோதனை நடத்தி கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்ட விரோதத்தில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சரக்கு வாகனங்களில் கடத்தப்படுவது சற்று குறைந்தது. அதேநேரம், அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களில் இருந்து, குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 150க்கும் மேற்பட்ட போதை பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சுதாரித்து கொண்ட போதை வஸ்து கடத்தல்காரர்கள், சமீபகாலமாக பிற மாநிலங்களில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களில், இடையில் பெரம்பூர், பேசின்பாலம், திருவள்ளூர் நிலையங்களில் இறங்கி விடுகின்றனர். அங்கிருந்து தனியார் வாகனங்களில் பிற இடங்களுக்கு கடத்தி செல்கின்றனர்.வடமாநில கும்பலிடமிருந்து ஓட்டேரி, புளியந்தோப்பு மற்றும் பேசின்பாலம் சரகத்தில், போதை வஸ்துகளை வாங்கி விற்பது அதிகரித்து வருகிறது.எனவே, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் மட்டுமல்லாது, புறநகர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி