உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி ஏறி இறங்கியதில் பெண் பலி சேதமடைந்த சாலையால் விபரீதம்

லாரி ஏறி இறங்கியதில் பெண் பலி சேதமடைந்த சாலையால் விபரீதம்

திருமங்கலம், ஐ.சி.எப்., காலனி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகள் ஹேமமாலினி, 24; எம்.காம்., பட்டதாரி. இவர், அம்பத்துாரில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அவரது அண்ணன் வெங்கடேசன், 28, உடன், நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றார்.அங்கிருந்து, அண்ணா நகரில் வேலை செய்யும் தாயை பார்க்க, பாடி மேம்பாலம் வழியாக பைக்கில் சென்றனர். அப்போது மழை பெய்ததால், திருமங்கலம், 18வது பிரதான சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பில் பைக் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.இதில், கண்ணிமைக்கும் நேரத்தில் ஹேமமாலினி மீது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஏறி இறங்கி சென்றது. இதில், முகம், கை, கால் முழுதும் சாலையில் தேய்ந்து சிதைந்தது. வெங்கடேசன் லேசான காயங்களுடன் தப்பினார்.அங்கிருந்தோர், ஹேமமாலினியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேதமடைந்த சாலையே விபத்துக்கு முதற்காரணம் என தெரிய வந்தது. அதேபோல, விபத்து ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுனரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை