உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு

சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு

கொருக்குப்பேட்டை, பேசின் பாலம் - கொருக்குப்பேட்டை இடையே, நேற்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம், விஜயவாடா நோக்கி செல்லும் விரைவு ரயில், கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள், சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில்கள் ஆங்காங்கே வழியிலேயே நிறுத்தப்பட்டன.தகவலறிந்த கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். கொருக்குப்பேட்டை ரயில் நிலைய சிக்னலை சரி செய்த பின், விஜயவாடா செல்லும் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. அடுத்தடுத்த ரயில்களும் இயக்கப்பட்டன.சிக்னல் கோளாறால், ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. பணிக்கு செல்வோர் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை