உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிவி அலுவலக தீ விபத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

டிவி அலுவலக தீ விபத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

திருமங்கலம், திருமங்கலம், 100 அடி சாலையில், மூன்று மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில், வானவில் என்ற தனியார் 'டிவி' சேனல் அலுவலகம் உள்ளது. இங்கு 12 பேர் பணியாற்றி வருகின்றனர். கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் நேற்று மதியம் 2:30 மணிக்கு கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தரைத்தளத்திற்கு இறங்கி வந்தனர். கட்டடத்தின் காவலாளியான பிச்சாண்டி, 77 என்பவர் மொட்டை மாடியில் சிக்கிக் கொண்டார். சம்பவம் அறிந்து, கோயம்பேடு, ஜே.ஜே.,நகர், அண்ணா நகர் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஸ்கை லிப்ட் வாகனம் வாயிலாக, மாடியில் சிக்கிய முதியவரை பத்திரமாக மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டாவது மாடியில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை