| ADDED : ஜூன் 04, 2024 12:30 AM
மடிப்பாக்கம், மவுன்ட் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர், 13 வயது சிறுமி. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார். மேலும், அவரின் வயிற்றில் கட்டி இருப்பது போல வீங்கி இருந்தது. இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மருத்துவமனை டாக்டர் உறுதி செய்து, போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, மடிப்பாக்கம் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.இதில், தான் பாத்ரூமில் இருந்தபோது, மொபைல் போனில் படம் எடுத்து அதை வெளியிடப்போவதாக மிரட்டி கீழ்க்கட்டளை, செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபிஷேக், 20, நிதிஷ், 19 தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.இதையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.