உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொலை முயற்சி வழக்கு இரண்டு பேர் சிக்கினர்

கொலை முயற்சி வழக்கு இரண்டு பேர் சிக்கினர்

திருமங்கலம், பா.ஜ., நிர்வாகியின் கணவரை வெட்டிய வழக்கில் தொடர்புடைய ஒருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்; மற்றொருவர், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45. இவரது மனைவி நதியா, 41; வழக்கறிஞர். இவர், பா.ஜ.,வில் மகளிர் அணி மாநில பொதுச் செயலராக உள்ளார்.திருமங்கலம் பகுதியில், கடந்த 14ம் தேதி சீனிவாசனை, மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியது. விசாரணையில், கடந்த 2005ல், சவுகார்பேட்டையில் நெடுஞ்செழியன் என்ற ரவுடியை கொலை செய்ததற்கு பழி வாங்க, சீனிவாசனை வெட்டியது தெரிந்தது. இந்த வழக்கில், ஏழு பேர் சரணடைந்தனர்; அதில், இருவர் பொய்யாக சரணடைந்ததால், வேறு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.வழக்கில் நேரடி தொடர்புடைய, சவுகார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், 29, என்பவரை, போலீசார் நேற்று, திருமங்கலத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட கணேசன் என்பவரின் நண்பரான, காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 40, என்பவர், எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை