உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயின் பறித்த மாணவர்கள் இருவர் கைது

செயின் பறித்த மாணவர்கள் இருவர் கைது

பல்லாவரம், பல்லாவரத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி, 48. வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக, பல்லாவரம்- பம்மல் சாலையில் நடந்து சென்றார். அப்போது, பின்தொடர்ந்து நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அம்சவள்ளியின் 3 சவரன் செயினை பறித்து சென்றனர்.புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை் ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர். அவர்களை புரசைவாக்கத்தில் கைது செய்து விசாரித்தனர். அதில், புரசைவாக்கத்தை சேர்ந்த முகமது அலி, 23, சதீஷ்குமார், 18, என்பதும், கல்லுாரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. ஆடம்பரமாக செலவு செய்வதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 5 சவரன் செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி