| ADDED : ஜூன் 11, 2024 12:27 AM
திறக்கப்படாத நுாலகம் வாசகர்கள் அதிருப்தி
பெரும்பாக்கம் லைட் ஹவுட் திட்டத்தில், 1,152 வீடுகள் உள்ளன. இங்கு, 1,000 சதுர அடி பரப்பில், நுாலகம் கட்டி, கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஐந்து புரவலர்கள், 300 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், நுாலகம் பல நாட்கள் திறக்கப்படுவது இல்லை. இதற்கு முன், தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தியால், சில நாட்கள் திறக்கப்பட்டது. மீண்டும் மூடப்பட்டு உள்ளது. தினசரி நாளிதழ்களும் வாங்கி வைக்கப்படுவது இல்லை. அருகில் உள்ள குப்பை தொட்டியால் துர்நாற்றம் வீசுகிறது. நுாலகத்தை அதற்குரிய நேரத்தில் திறக்க, நுாலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வாசகர்கள், பெரும்பாக்கம்.