உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மைதானத்தை ஆக்கிரமித்த வாகனங்கள் விளையாட வழியின்றி இளைஞர்கள் தவிப்பு

மைதானத்தை ஆக்கிரமித்த வாகனங்கள் விளையாட வழியின்றி இளைஞர்கள் தவிப்பு

பூந்தமல்லி, பூந்தமல்லி காவல் நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தைச் சுற்றி, வழக்கில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், இளைஞர்கள் கால்பந்து விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.பூந்தமல்லி நகராட்சி மேல்மாநகரில், அம்பேத்கர் விளையாட்டு திடல் உள்ளது. இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், கால்பந்து விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தின் அருகே, பூந்தமல்லி காவல் நிலையம் உள்ளது. வழக்கில் சிக்கும் வாகனங்களை, இந்த மைதானத்தை சுற்றி நிறுத்தி உள்ளதால், கால்பந்து விளையாடும் இளைஞர்களுக்கு இடையூறாக உள்ளது.எனவே, இந்த வாகனங்களை அகற்றி, இளைஞர்கள் விளையாடும் வகையில் சீரமைத்துக் கொடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது:இந்த விளையாட்டு மைதானத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் கால்பந்து விளையாடுகிறோம்.காலை, மாலை என தினமும் சிறுவர்கள், இளைஞர்கள் கால்பந்து பயிற்சி எடுக்கின்றனர். ஆண்டுதோறும் கால்பந்து போட்டிகள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், வழக்கில் சிக்கிய பைக், கார், ஆட்டோ, லாரி என, நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், மைதானத்தை சுற்றி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் துருப்பிடித்து, மண்ணோடு மண்ணாகி வருகின்றன. ஆர்வத்துடன் கால்பந்து விளையாடும் போது, இந்த வாகனங்கள் மீது மோதி விளையாட்டு வீரர்கள் காயமடைகின்றனர்.போலீசார் நிறுத்தும் வாகனங்களால், மைதானம் சுறுங்கிக் கொண்டே வருகிறது. வழக்கில் சிக்கிய வாகனங்களை வேறு பகுதியில் நிறுத்த, காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை