உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் அத்துமீறல் வாலிபருக்கு தர்ம அடி

மூதாட்டியிடம் அத்துமீறல் வாலிபருக்கு தர்ம அடி

பாண்டி பஜார், பாண்டிபஜார், ஆர்.கே.புரம் அம்மன் கோவில் அருகே நடைபாதையில், கடந்த 10 ஆண்டுகளாக 85 வயது மூதாட்டி வசித்து வருகிறார். அதிகாலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, பால் பாக்கெட் போட்டு வருகிறார்.இவரிடம், கடந்த 4ம் தேதி இரவு, மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது.மூதாட்டி சத்தம் போடவே, அவரது முகத்திலும், கழுத்திலும் தாக்கி தப்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இளைஞரை மூதாட்டி அடையாளம் கண்டு, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். காப்பாற்ற வந்த அவரது நண்பர் ராமராஜம், 31, என்பவருக்கும் அடி, உதை விழுந்தது.இந்நிலையில், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர் மீது, பாண்டிபஜார் போலீசில் முதாட்டி புகார் அளித்தார்.விசாரணையில் பிடிபட்ட நபர் பாண்டிபஜார், ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த ரமேஷ், 25, என்பதும், தி.நகரில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.இதையடுத்து, இந்த வழக்கு தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ