| ADDED : ஜூலை 13, 2024 12:23 AM
சென்னை, சென்னை, வி.ஐ.டி., பல்கலையில் சட்டம், பொருளாதாரம், கணினி அறிவியல் உள்ளிட்ட இளங்கலை படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவங்கியுள்ளது. துவக்க விழாவிற்கு தலைமை ஏற்று, வி.ஐ.டி., நிறுவனர் மற்றும் வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், ''குழந்தைகளின் கல்விக்காக, இன்றைய பெற்றோர் அதிகம் செலவு செய்கின்றனர். ''அதை உணர்ந்து மாணவர்கள் கற்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், 3 சதவீதம் மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.சிறப்பு விருந்தினரும் தமிழக முன்னாள் தலைமை செயலருமான இறையன்பு பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய, ஒவ்வொரு நிமிடமும் கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால், வேலைவாய்ப்புகள் தேடி வரும்,'' என்றார்.